எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்படும் நபர்களை விசாரணையின்றி கைது செய்வதற்கு தடை விதித்தும், கைதாகும் நபர்கள் ஜாமின் பெறும் வகையிலும் சட்ட விதிகளை திருத்தியும் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.