ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூன்று வீரர்களுடன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்தது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் காற்றுக் கசிவின் மர்மம் குறித்து ஆய்வு செய்வதற்காக மூன்று வீரர்களுடன் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் நேற்று மாலை 5 மணியளவில் கஜகஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் செலுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். காற்றுக் கசிவின் மர்மம் குறித்து வரும் 11-ம் தேதி அக்குழு ஆய்வு செய்கிறது.
இந்த விண்கலத்தில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பயணம் செய்கின்றனர். ஆறரை மாதங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புகின்றனர்.