நாஜிப் படைகளுக்கு எதிரான வெற்றியின் 76 ஆவது ஆண்டு நினைவு தினத்தை, சிறப்பாக கொண்டாடிய ரஷ்ய ராணுவம்

இரண்டாம் உலக போரில், ஜெர்மனியின் நாஜிப் படைகளுக்கு எதிரான வெற்றியின் 76 ஆவது ஆண்டு நினைவு தினத்தை, ரஷ்ய ராணுவம் சிறப்பாக கொண்டாடியது.

தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரெட் ஸ்கொயர் பகுதியில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில், அதிபர் புதின் கலந்து, கொண்டு ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார்.

அணிவகுப்பில் ரஷ்யாவின் 37 படைப்பிரிவுகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் வீறுநடை போட்டனர்.

190 ராணுவ தளவாடங்கள், பீரங்கிகள் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, போர்விமானங்கள் ரஷ்யா நாட்டு தேசிய கொடியை வானில் வரைந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தின

Exit mobile version