ரஷ்ய அதிபர் புதின் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் முதன்முறையாக சந்தித்து பேசினர். அரசு முறை பயணமாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ரஷ்யாவில் உள்ள விளாடிவாஸ்டாக் நகரில் இருநாடுகளுக்கிடையேயான முக்கிய பிரச்சனைகள் குறித்து விளாடிமிர் புதினும் – வடகொரிய அதிபரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முதன் முறையாக நடந்த புதின் – கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பில், ஆயுத ஒழிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே இரண்டு முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version