ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மக்கள் வீடுகளை இழந்து தவிப்பு

ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையில் 6 மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்தன. இந்நிலையில் அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனபடுத்தியுள்ள நிலையில், இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 8 பேர் மாயமாகியுள்ளதாகவும், 10 ஆயிரம் வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், இதனால், 33 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்நாட்டு மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version