அரசு முறை பயணமாக இலங்கை சென்ற ரஷ்ய இராணுவ தளபதி

ரஷ்ய தரைப்படை தளபதியான ஓலேக் சல்யுகோவ், 5 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார்.

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை வந்த சல்யுகோவுக்கு கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த பயணத்தின் போது, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை  சல்யுகோவ் சந்திக்க உள்ளார்.   இருநாட்டு நல்லுறவு, பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான முக்கிய முடிவுகள் அப்போது எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version