நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யா

ரஷ்யாவில், நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை தொடர்பான வீடியோக்களை அந்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவில் வருடாந்திர அணுசக்தி தயார் நிலை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த பயிற்சியில் நீர்மூழ்கிக் கப்பல்கள், ராணுவக் கப்பல்கள் மூலம் ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் ஏவுகணைகள் நெருப்பை உமிழ்ந்தபடி காற்றைக் கிழித்துக்கொண்டு பாய்ந்தன.

நடுத்தர, தொலைவு ரக ஏவுகணை சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டதால் வருத்தம் தெரிவித்த ரஷ்யா, ராணுவ பதற்றங்களை அதிகரிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியது. ஏவுகணை நிலவரம் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின், தங்களது நாடு நடுத்தர மற்றும் குறுகிய தொலைவு ரக ஏவுகணைகளை மேம்படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த சூழலிலேயே இந்த ஏவுகணை சோதனையானது நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version