1945-ல் இருந்து, சுபாஷ் சந்திரபோஸ் ரஷ்யாவில் வாழ்ந்து வந்துள்ளார் என்ற தகவல் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான ஆவணங்கள் இருந்தால் அளிக்குமாறு ரஷ்ய அரசிடம், 2014ம் ஆண்டுமுதல் இந்திய அரசு சார்பில் கேட்கப்பட்டு வருகிறது.
இதற்கு ரஷ்ய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுத்துப் பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.