ஓடும் ரயிலில் பெண் பேராசிரியருக்குப் பாலியல் தொல்லை

ஓடும் ரயிலில், ஓய்வு பெற்ற பெண் பேராசிரியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஊழியரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ரயிலில் குளிர்வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்த ஓய்வுபெற்ற பெண் பேராசிரியருக்கு ரயில்வே ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில், ஓய்வு பெற்ற பெண் பேராசிரியர், சம்பவம் தொடர்பாக புகார் தெரிவித்தார். ரயில்வே காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பாலியல் தொல்லை கொடுத்தவர் வேடசந்தூரைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் சரவணக்குமார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சரவணக்குமாரைக் கைது செய்த கொடைரோடு காவல்துறையினர் நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version