போலி காவல்நிலையம் நடத்தி வசூலில் ஈடுபட்டவர்கள் கைது

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் போலியான காவல்நிலையம் நடத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் பணம் வசூலித்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

குவாலியர் சம்பல் பள்ளத்தாக்கு பகுதி பொதுவாக கட்டப்பஞ்சாயத்திற்கும், அடிதடிக்கும் பிரபலமானது. இப்பகுதியைச் சேர்ந்த ரிங்கேஷ், சுரேந்திரா, கமலா, சிவம் ஆகிய 4 பேர் காவலர்கள் போல உடையணிந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வசூல் செய்து வந்துள்ளனர். இதனால் தொடர்ச்சியாக புகார்கள் வரவே இது குறித்து விசாரணை நடத்திய உயரதிகாரிகள், நால்வரும் போலி காவல்நிலையம் நடத்தி வருவதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version