சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் உண்மைக்கு புறம்பான தகவல்களும் மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. கொரோனா தொற்று தொடர்பான அச்சுறுத்தலை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள் சில சமூக வலைத்தள வாசிகள். பேஸ்புக், வாஸ்ட் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டோக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்தி பரப்பினால் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்திருந்தாலும், அது கவலையளிக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. இயற்கை முறையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை என்ற வதந்தி, அது தொடர்பான புகைப்படங்கள், அரசு செய்தி குறிப்புகளை நையாண்டி செய்வது, சமூக ஒற்றுகையை சீர்குலைக்கும் விதமாக தகவல்களை பகிர்வது போன்றவை பிற மக்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது.  நாடு முழுவதும் 50 கோடி இணையதள பயன்பாட்டாளர்கள் உள்ள நிலையில், ஊரடங்கு நேரத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.  30 கோடி பேஸ்புக் பயன்பாட்டாளர்கள்,  40 கோடி வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள்  உள்ள நிலையில், சில சமயங்களில் அவர்களை அறியாமலேயே உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிவிடும் நிலை ஏற்படுகிறது.  சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் கண்டறிந்து களைவது அரசுக்கு சவாலாக விளங்குகிறது. இந்நிலையில். 1897ம் ஆண்டு தொற்று நோய் சட்டத்தின் படி, வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள காவல்துறையினர், வதந்தி பரப்புவோரை கண்டறிந்து களையும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version