டிவிட்டரில் பரவும் வதந்தி- யாரும் நம்ப வேண்டாம்

டிவிட்டரில் கடந்த நாட்களில் உள்நுழையும் போது உங்கள் அக்கவுண்ட் பக்கத்தின் கலர் மற்றும் தீம்-ஐ மாற்ற வேண்டும் என்றால் உங்களின் பிறந்த வருடத்தை 2007 என்று தேர்வு செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில் உங்கள் பக்கத்தின் கலர் நீலம் நிறமாக மாறும் என்ற செய்தி வந்த வண்ணம் உள்ளது.அதனை உண்மை என்று நம்பி பலர் தங்களது பிறந்த வருடத்தை மாற்றினர். இதனால் அவர்களின் டிவிட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டது.

தற்போது இந்த செய்திக்கு டிவிட்டர் தனது விளக்கத்தை அளித்து, பயனாளர்களை எச்சரித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பிறந்த ஆண்டை 2007 ஆக மாற்ற கோரும் செய்தியை அனைவரும் புறக்கணியுங்கள். அது முற்றிலும் வதந்தி. நீங்கள் அவ்வாறு செய்யும் போது உங்களின் வயது 12 அல்லது 13 வயது சிறுவனாக கணக்கில் கொள்ளப்பட்டு உங்கள் அக்கவுண்ட் முடக்கப்படும்” என்று எச்சரித்துள்ளது.

ஒருவேளை உங்களது அக்கவுண்ட் முடக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டையை காண்பித்து டிவிட்டர் சப்போர்ட் உதவியுடன் மீட்டெடுத்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளது.

 

Exit mobile version