சமூக வலைத்தளத்தில் வெளியான நாடாளுமன்ற தேர்தல் தேதி வெறும் வதந்தி – தலைமை தேர்தல் ஆணையம்

சமூக வலைதளங்களில் வெளியான நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் வதந்தி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மே மாதம் நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இதனிடையே, 2019-ம் ஆண்டுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் வெறும் வதந்தி என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், வதந்தியை பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

Exit mobile version