ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

அந்நிய நேரடி முதலீடைப் பெற்று செயல்படும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட விதிகளை மத்திய வர்த்தகத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இந்த நிறுவனங்கள் தங்களிடம் உள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சேவை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு விற்பனையாளர் தன்னிடம் உள்ள பொருள்களில் 25 சதவீதத்தை மட்டுமே ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களிடம் மட்டுமே பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்று எந்த விற்பனையாளரையும் ஆன்லைன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கேஷ் பேக் என்ற பெயரில் தள்ளுபடி அளிக்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பாரபட்சம் காட்டக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வர இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version