ஹேம்நாத்திடம் ஆர்டிஓ விசாரணை – பல உண்மைகள் வெளிவர வாய்ப்பு!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக, ஹேம்நாத்திடம் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது.

சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக ஹேம்நாத் மற்றும் சித்ரா பெற்றோரிடம் இரண்டு கட்டங்களாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ, விசாரணை மேற்கொண்டார். இதனிடையே, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக, அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை காவல்துறையினர் கைது செய்து, பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஹேம்நாத்தை விசாரணைக்கு ஆஜராகக் கோரி பொன்னேரி கிளைச்சிறைக்கு ஆர்டிஓ சம்மன் அனுப்பி இருந்தார். அதனைத்தொடர்ந்து, ஹேம்நாத் ஆர்டிஓ விசாரணைக்கு இன்று ஆஜரானார். ஹேம்நாத்திடம் நடைபெறும் விசாரணையில், சித்ரா தற்கொலைக்கான பல்வேறு காரணங்கள் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.

 

Exit mobile version