RTGS, NEFT ஆகிய இணைய வழி பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட கட்டணம் ஜூலை 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரூ.2 லட்சத்திற்கு மேல் இணையவழி பண பரிமாற்றத்திற்காக RTGS பண பரிமாற்றம் செய்யப்படுகிறது.இணையவழி பண பரிமாற்றமான RTGS, NEFT ஆகிய முறைக்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. வங்கி வேலை நாட்களில் பண பரிமாற்றத்திற்காக மாலை 4.30 மணி ஆக விதிக்கப்பட்ட நேரக்கெடு மாலை 6 மணியாக நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், RTGS, NEFT ஆகிய இரு வகையிலான பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட கட்டணம் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.