ஆதார் மூலம் மத்திய அரசுக்கு ரூ.90,000 கோடி சேமிப்பு: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

ஆதாரை அமல்படுத்தியதன் மூலம் மத்திய அரசு 90 ஆயிரம் கோடி ரூபாய் சேமித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆதாரை அமல்படுத்துவதில் அரை மனதுடன் இருந்ததாக அருண் ஜேட்லி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் திடமான தலைமையின் கீழ் ஆதார் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதாகவும், போலியான பயனாளர்களை நீக்கியதால் அரசுக்கு கடந்த ஆண்டு மார்ச் வரையிலும் 90 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பாகக் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இந்த சேமிப்பின் மூலம் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற மாபெரும் மூன்று நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ள அவர், ஆதார் இடைத்தரகர்களை ஒழித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்

Exit mobile version