சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்காக 3 ஆயிரத்து 958 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்காக 18 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நபார்டு திட்டங்களின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்ள 811 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மாநில அரசின் சொந்த வரி வருவாய் 2019-20ம் ஆண்டில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 813 கோடி புள்ளி 06 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 1 லட்சம் வீடுகளை கட்டித்தர ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.