ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச வளர்ச்சிக்காக 80 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் 370 ஆவது சட்டப்பிரிவும் நீக்கப்பட்டது. இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் 80 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.