மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள இந்திய நடனத் திருவிழாவுக்காக தமிழக அரசு, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்திய நடனத் திருவிழா என்னும் பெயரில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள இந்திய நடனத் திருவிழாவுக்காக சுற்றுலாத் துறை ஒரு கோடி ரூபாய் நிதி வழங்க கோரியிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு 50 லட்ச ரூபாயும், மத்திய அரசு 25 லட்ச ரூபாயும், ஆக மொத்தம் 75 லட்ச ரூபாய் இந்திய நடனத் திருவிழாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதியான 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.