சத்தியமங்கலத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து ரூ.7 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தனியார் திருமண மண்டபம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே காரில் வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் ஜெயராஜ்  என்பவரிடம்  இருந்து உரிய ஆவணங்கள் இல்லாத 7 லட்சத்து 8 ஆயிரத்து 220 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக்கிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. 

Exit mobile version