பொங்கலையொட்டி சிறப்பு பேருந்துகளின் முன்பதிவில் ரூ.6.64 கோடி வசூல்

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகளுக்கு இதுவரை முன்பதிவு செய்தவர்கள் மூலம் 6 கோடியே 64 ரூபாய் வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் உட்பட 24 ஆயிரத்து 708 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள் முன்பதிவு செய்ய, கோயம்பேட்டில் 26 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாம்பரம், பூவிருந்தவல்லியில் 4 கணினி முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 647 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் 6 கோடியே 64 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 16 ஆயிரத்து 421 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version