ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி: விவசாயிகளின் வருமானம், கடன் குறித்து ஆய்வு

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக அவர்களின் வருமானம் மற்றும் கடன் குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். இதையடுத்து, விவசாயிகளின் வருமானம் மற்றும் கடன் குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய வேளாண்துறை இணை கஜேந்திரசிங் ஷெகாவத், தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, இந்த ஆய்வினை நடத்த உள்ளதாக குறிப்பிட்டார். அப்போது, விவசாய குடும்பங்களின் நிலை பற்றியும் ஆய்வு நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். விவசாய குடும்பங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றிய விரிவான மதிப்பீடு அளிப்பதே இந்த ஆய்வின் நோக்கம் என குறிப்பிட்ட அவர், புதிய சூழ்நிலை, தேவை, நிதி ஆதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தகைய சோதனை நடத்தும் முடிவு எடுக்கப்படுவதாக விளக்கமளித்தார்.

Exit mobile version