தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு!

கொரோனா பரவலை தடுக்க வரும் 31-ம் தேதி வரை பொது இடங்களில் அதிகளவில் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள, கர்நாடக எல்லையோரம் உள்ள 16 மாவட்டங்களில் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை வரும் 31ஆம் தேதி வரை மூடவும், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். உள்ள அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கும் வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். போர் கால அடிப்படையிலர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சருக்கும், தனக்கும் தினமும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதை போல், பொதுமக்களுக்கும் பல அறிவுறுத்தல்களை முதலமைச்சர் வழங்கியுள்ளார். அதன்படி, பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்கும்படி முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். விடுமுறை நாட்களில் குழந்தைகள் குழுவாக விளையாடாதவாறு பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும், வீட்டிற்குள் நுழையும் போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version