சேலத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 57 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் தரப்படுவதை தடுக்கும்வகையில், தமிழகமெங்கும் தேர்தல் பறக்கும் படையினர் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் கொண்டலாம்பட்டியில் கண்காணிப்பு குழு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, அந்தவழியாக வந்த, கார் ஒன்றில் கட்டுகட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், கரூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் ரமேஷ் என்பவர் விழுப்புரத்தில் இருந்து தருமபுரிக்கு தொழில் நிமித்தமாக பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது.
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட நிலையில், காரில் இருந்த 57 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரமேஷிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.