மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி கடனுதவி – ரிசர்வ் வங்கி

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தொழில்களில் முடக்கம் ஏற்பட்டு, பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. பிராங்க்ளின் டெம்பிள்டன் என்ற நிறுவனம், கடந்த வாரம் 6 திட்டங்களை நிறுத்தியதுடன், முதலீட்டாளர்களுக்கு அவர்களது தொகையை திருப்பி தர முடிவு செய்தது. இதனால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் கலக்கம் அடைந்தனர். இந்நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முடங்காமல் இருக்கும் வகையில், அந்நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Exit mobile version