கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.50 கோடி நிதியுதவி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 50 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக கோடக் மஹிந்திரா வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் உதய் கோடக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய – மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக தனது சார்பாகவும், வங்கி சார்பாகவும் தலா 25 கோடி ரூபாய் வீதம், 50 கோடி ரூபாய் நிவாரணமாக பிரதமர் அறிவித்துள்ள வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version