ரபேல் விமான விலையை கூறும் நபருக்கு ரூ.5 கோடி பரிசு – காங்கிரஸ் கட்சி

பீகார் மாநிலம் பாட்னாவில் ஒட்டப்பட்டிருக்கும் அந்த போஸ்டர்களில் பிரதமர் மோடியின் கார்டூன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளன.

மேலும் பிரான்ஸிடம் இருந்து வாங்கப்பட இருக்கும் ரபேல் விமானத்தின் விலையை யாரேனும் சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பியிருக்கும் காங்கிரஸ் கட்சியினர், நாடு முழுவதும் பிரதமர் மோடி திறந்து வைத்திருப்பதாக கூறப்படும் 35 விமான நிலையங்களின் பெயர்களை பட்டியலிட முடியுமா என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு சரியான பதில் அளிக்கும் அதிர்ஷ்டசாலிக்கு துர்கா பூஜையை முன்னிட்டு 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version