தமிழகத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய்

திருவாரூர் மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பல்வேறு அம்சங்களையும் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.அத்திக்கடவு – அவிநாசி திட்டம் ரூ.1,652 கோடியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் விரைவில் தொடங்கி வைக்கப்படும் என்றார்.ஜெர்மன் வங்கி உதவியுடன் சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் குடிசை பகுதிகளை மேம்படுத்த உலக வங்கி உதவியுடன் விரிவான வீட்டுவசதி திட்டத்தை அரசு வடிவமைத்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.மாதவரம்-சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம்-சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரையிலான வழித்தடங்களுக்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ரூ.20,196 கோடி நிதியுதவிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.பழங்குடியினரின் எழுத்தறிவை அதிகரிக்கும்வகையில், அவர்கள் வாழும் உட்புறப் பகுதிகளில் அதிக பள்ளிகளை துவக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அனுமதி அளித்த மத்திய அரசிற்கு நன்றி.
வாகன உற்பத்தி துறையில் தமிழ்நாடு முக்கிய மையமாக விளங்கும் நிலையில், அடுத்த தலைமுறை மின்சார வாகனங்கள் தயாரிப்பதை ஊக்குவிக்க கவனம் செலுத்தப்படும்.பாதுகாப்பு தளவாடங்கள், வானூர்தி சாதனங்கள் தயாரிப்பதை ஊக்கப்படுத்த, தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.தொழில் முனைவோர் புதிய தொழில் தொடங்கவும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் புதிய கொள்கையை அரசு விரைவில் வெளியிடும்.

Exit mobile version