சமூகப்பாதுகாப்பு, ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,315.21 கோடி ஒதுக்கீடு

 தமிழக நிதிநிலை அறிக்கையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டத்திற்காக 4 ஆயிரத்து 315 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகங்கள் அமைக்க இடங்களை கண்டறிவதற்கான பணிகள் நடைபெறுவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகப்பாதுகாப்பு, ஓய்வூதியத் திட்டங்களுக்கு 4 ஆயிரத்து 315 கோடியே 21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கான விரிவான வழிபாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இயற்கை மரணங்களால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயாகவும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு 4 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைக்காக  ஆயிரத்து 360 கோடியே 11 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version