பாசமான நாய்க்காக ரூ.42 கோடி செலவு!

அமெரிக்கவில் பிரபல கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அலுவலராக இருப்பவர் டேவிட் மேக்நெய்ல். இவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்க்கு இருதயத்தில் கட்டி வளர்ந்ததை அடுத்து, ரத்த குழாய் புற்றுநோய் பாதிப்பும் ஏற்பட்டிருந்தது.

கால்நடை மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைக்கு பிறகு நாய் முழுமையாக உடல் நலம் பெற்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த டேவிட் தனது நாயை காப்பாற்றிய மருத்துவர்களை கவுரவிக்க நினைத்துள்ளார். சூப்பர் பவுல் கால்பந்து போட்டியில் நாய்களுக்கான புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.42 கோடி செலவில் விளம்பரம் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் நோய்க்கான ஆராய்ச்சிக்காக நன்கொடை வழங்குமாறு பொதுமக்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கால்நடை மருத்துவ கல்லூரிக்கு மக்கள் நன்கொடை வழங்குவார்கள் என தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார். அவருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version