சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் உலோக தயாரிப்பு நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், கணக்கில் வராத 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை கீழ்ப்பாக்த்தில் உள்ள தனியார் உலோக நிறுவனம், தாமிரம், நிக்கல், அலுமினியம் போன்ற உலோகங்களை தயாரித்து வருகிறது. வீட்டுமனை விற்பனை போன்றவற்றிலும் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, கணக்கில் வராத 400 கோடி ரூபாய் மதிப்பிலான, சொத்து ஆவணங்கள், காசோலைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.