சேலத்தில் காரில் மறைத்து எடுத்து வந்த 49 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறை வரும் 27-ம் தேதி வரை அமலில் இருப்பதால், சேலத்தில் பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சேலம் செவ்வாய்பேட்டை காளியம்மன் கோயில் அருகே அவர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரினை நிறுத்தி சோதனை செய்ததில், சரியான ஆவணங்கள் இல்லாமல் துணிகளுக்கு அடியில் மறைத்து வந்திருந்த 49 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். பின் பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர். காரில் பணத்தை கொண்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரகுமாரிடம், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குட்கா போன்ற பொருட்களை மறைமுகமாக வாங்க சென்றது தெரிய வந்துள்ளது.