கரூரில் தொழிலதிபரின் வீட்டிலிருந்து 32 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரை சேர்ந்த சிவசாமி என்பவர் ஷோபிகா இம்பெக்ஸ் என்ற கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறார். இவருக்கு சொந்தமான கொசுவலை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சோபிகா கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் அதன் அலுவலகம், உரிமையாளர் சிவசாமிக்கு சொந்தமான வீடு ஆகிய இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிவசாமி வீட்டில் சுமார் 32 கோடி ரூபாய் அளவிற்கு கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.