விருதுநகர் மாவட்டத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.3.18 கோடி பறிமுதல்

விருதுநகர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 3 கோடியே 18 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராஜபாளையம் அருகே சேத்தூர் அடுத்துள்ள அசையா மணி விளக்குப் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது வங்கிகளுக்கும் ஏடிஎம் மையத்திற்கும் பணம் எடுத்துச் செல்லும் இரண்டு வாகனங்களை மறித்து சோதனை செய்தனர்.

அப்போது, உரிய ஆவணம் இன்றி ஒரு வாகனத்தில் ஒரு கோடியே 52 லட்சம் ரூபாய் எடுத்து வரப்பட்டதும் மற்றொரு வாகனத்தில் ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் எடுத்துவரப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அரசு கருவூலத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.

Exit mobile version