52-வது ஆசிய பாடிபில்டிங் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரும், அர்ஜுனா விருது பெற்றவருமான தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரனுக்கு 25 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற 52வது ஆசிய பாடிபில்டிங் போட்டி மற்றும், தாய்லாந்தில் நடைபெற்ற 10-வது உலக பாடிபில்டிங் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
இந்த நிலையில், பாடிபில்டிங் போட்டியில் பதக்கம் வென்ற பாஸ்கரனுக்கு 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாஸ்கரனின் பயிற்சியாளர் அரசுக்கு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தனக்கும், தனது பயிற்சியாளருக்கும் ஊக்கத்தொகை வழங்கிட அரசாணை வெளியிட்ட தமிழக அரசிற்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், பாஸ்கரன் நன்றி தெரிவித்துள்ளார்.