போலி நகைகளை அடகு வைத்து ரூ.25 லட்சம் மோசடி

தமிழகம் முழுவதும் போலி நகைகளை அடகு வைத்து 25 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் பேரையூரைச் சேர்ந்தவர் மாதவன். இவர் நாகை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி 15க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள அடகு கடைகளில், தங்க நகை எனக் கூறி போலி நகைகளை அடகு வைத்துள்ளார். இது குறித்து ஏமாந்த அடகு கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையினர் மாதவனை கைது செய்தனர். மேலும், விசாரணையில் போலி நகைகளை அடகு வைத்து கிடைத்த சுமார் 25 லட்ச ரூபாயை வைத்து மாதவன், 5 மனைவிகளுடன் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்தார் என்பது தெரிய வந்தது. மாதவனை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த போலி ஆதார், ஓட்டுனர் உரிமம் மட்டுமின்றி அவர் பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version