தமிழகத்தில் நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகளுக்காக, 244 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2019 – 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக நீர்தேக்கம், கால்வாய் அமைத்தல் போன்றவற்றுக்காக 284 கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளுக்காக 244 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு வெள்ளதடுப்பு பணிகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.