20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மோசடி- வங்கி அதிகாரி கைது

20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் தனது மகன் பெயரில் மாற்றிய இந்தியன் வங்கி முன்னாள் துணைப் பொது மேலாளர், தனது மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர், சென்னை பாரிமுனையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் துணை பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மைத்துனர் பெயரும் குணசேகரன் தான். இந்த நிலையில் மைத்துனர் குணசேகரன் இறந்து விட்ட நிலையில், அவரது பெயரிலான 20 கோடி ரூபாய் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம தனது மகன் பெயருக்கு மாற்றி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அவரது மனைவி ராசாத்தியும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. வேப்பேரி போலீசார் குணசேகரன் மற்றும் அவரது மனைவி ராசத்தி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் 14 வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரோஸ்லின் துரை உத்தரவிட்டார்.

Exit mobile version