தமிழகத்தில் போட்டி தேர்வுகளுக்காக ரூ.2.8 கோடியில் பயிற்சி வகுப்புகள்

போட்டி தேர்வுகளுக்காக சென்னை, கோவை உட்பட 11 மாநகராட்சிகளில் 2.8 கோடி ரூபாய் மதிப்பில் பயிற்சி வகுப்புகள் நிறுவப்படும் என்று அமைச்சர் எஸ். வளர்மதி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது துறை சார்ந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் எஸ். வளர்மதி, போட்டி தேர்வுகளுக்காக சென்னை, கோவை, மதுரை உள்பட 11 மாநகராட்சிகளில் 2 புள்ளியே 8 கோடியே ரூபாய் மதிப்பில் பயிற்சி வகுப்புகள் நிறுவப்படும் என்று தெரிவித்தார். மேலும், 7 பள்ளி விடுதிகள் , கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்துக்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் உயர்த்தப்படும் என்றும் கூறினார்.

Exit mobile version