ராஜபாளையத்தில் வாகன தணிக்கையின் போது ரூ.2.44 லட்சம் பறிமுதல்

ராஜபாளையம் அருகே வாகன தணிக்கையின் போது உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சோதனைச் சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாமக்கல் நோக்கி சென்ற லாரியை சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட 2 லட்சத்து 44 ஆயிரத்து 110  ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  

Exit mobile version