பல்லாவரம் அருகே கணக்கில் வராத ரூ.2.24 லட்சம் பறிமுதல்

சென்னை பல்லாவரம் அருகே, திருநீர்மலை பிரதான சாலையில், தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில், காரில் வந்த வியாபாரி ஒருவரிடம் கணக்கில் வராத 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜான் முகமது என்ற இரும்பு வியாபாரி வந்த காரில் சோதனை மேற்கொண்டு, பணத்தை கைப்பற்றியுள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், பணத்தை அரசு கருவூலத்தில் சேர்த்தனர்.

Exit mobile version