தமிழக அரசுக்கு ரூ.1,996 கோடி நிதி ஒதுக்கீடு – மத்திய நெடுஞ்சாலை துறை ஒப்புதல் வழங்கியுள்ளது

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக ஆயிரத்து 996 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்காக ஆயிரத்து 996 கோடி ரூபாய்க்கான ஒப்புதலை மத்திய நெடுஞ்சாலை துறை அளித்துள்ளது.

சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெரிய மேம்பாலங்கள் அமைத்தல், இரண்டு வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாக தரம் உயர்த்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் தலா 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version