கீழ்ப்பாக்கத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை!

சென்னையில், தனியார் மருத்துவமனையில் பணிப்பெண்ணாக இருந்த நபர், 15 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் சர்புஜன் தாஸ் தெருவில் பத்மா கிளினிக் நடத்தி வருபவர் பத்மஜா க்ரிஷ். இந்த மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளாக தவ்லத் நிஷா என்பவர் பணிப்பெண்ணாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், தவ்லத் நிஷா தனது மருத்துவமனையில் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி சென்றுவிட்டதாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் கொள்ளை போனது தொடர்பாக, கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளைக்கான காரணம் என்னவென்பது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகின்றது.

Exit mobile version