தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.13.90 கோடி பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 13 கோடியே 90 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை தேர்தல் செலவின பார்வையாளர்களாக 79 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தேர்தல் தொடர்பாக, 597 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 187 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

Exit mobile version