தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன்காணோலி காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்த இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் 128 புள்ளி 33 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார். 280 கோடி ரூபாய் மதிப்பிலான 989 கிலோ தங்கமும், 611 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 9 புள்ளி 13 கோடி மதிப்பிலான இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சாஹூ கூறினார்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதில் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 16ம் தேதி காலை 10 மணி முதல் 18ம் தேதி இரவு 12 மணி வரை, மூன்று நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என்றும் சத்யபிரதா சாஹூ கூறினார். இதேபோன்று, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.