சுகாதாரத்துறைக்கு ரூ. 12,563.83 கோடி ஒதுக்கீடு

சுகாதாரத்துறைக்கு 12 ஆயிரத்து 563 கோடியே 83 லட்சம் ரூபாய் தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர் சம்பளத்திற்காக 55 ஆயிரத்து 399 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் ஓய்வூதியங்களுக்கு 29 ஆயிரத்து 627 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருக்கிறது. வணிக வரி வருவாயானது 96 ஆயிரத்து 177 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணித்துள்ளது. வாகனங்கள் மீதான வரி வருவாய் ஆறாயிரத்து 510 கோடி ரூபாயாகவும், வரி அல்லாத வருவாய் 13 ஆயிரத்து 326 கோடி ரூபாயாகவும் இருக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வரிகளில் தமிழக அரசின் பங்கு 33 ஆயிரத்து 978 கோடி ரூபாயாகவும், மத்திய அரசு மூலம் பெறப்படும் உதவி மானியங்கள் 25 ஆயிரத்து 602 கோடி ரூபாயாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று, நிகர நிலுவை கடன் 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடியாக இருக்கும் என அரசு கணித்துள்ளது. இரண்டாயிரத்து 685 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Exit mobile version