5 மாநிலங்களிலிருந்து ரூ.121 கோடி பறிமுதல் -தேர்தல் ஆணையம்

5 மாநில சட்டபேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 121 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு கடந்த மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மேலும், பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில், 5 மாநிலங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 121 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

Exit mobile version