தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.12 கோடி பறிமுதல்

தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 12 கோடியே 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோடை காலத்தில் வெயில் நேரத்தில் பொதுக்கூட்டங்களை நடத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக நிழல் தரும் கூரை, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

அனுமதி பெறாமல் கட்சி கொடி கட்டப்பட்ட வாகனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்த அவர், தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். உரிய ஆவணத்தோடு மட்டுமே ஏடிஎம். மையங்களுக்கு பணம் கொண்டு செல்லப்பட என்று அவர் அறிவுறுத்தினார்.

Exit mobile version