ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு!

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், குடும்ப அட்டைதாரர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு, தமிழக அரசு நிவாரணம் வழங்கியது. மேலும், ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்துள்ள 13 லட்சத்து 35 ஆயிரம் பேர் பயன்பெறுவ

Exit mobile version